தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்யும் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது. மெட்ராஸ் நகரத்தின் வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்ய “நகர மேம்பாட்டுப் பொறுப்பாட்சிக் குழுமம்” என்ற பெயரில் ஒரு சிறிய அமைப்பாக 1947 ல் உருவாக்கப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக மாநிலம் முழுவதும் வீட்டுவசதி துறையில் அதிகரித்து வரும் தேவைகளை சமாளிக்க 1961 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் என்ற ஒரு முழு அமைப்பாக உருவாக்கப்பட்டது.
மனிதகுலத்தின் மூன்று அடிப்படை தேவைகளில் ஒன்று வீடமைப்பு. வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்வதில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் ஒவ்வொருவருக்கும் வீடு வழங்குவதற்கான சிறந்த நோக்கத்துடன் முக்கிய பங்கு வகிக்கிறது. கொள்கையின் ஒரு விஷயமாக த.நா.வீ.வ. கட்டுமானத்தில் தரமான பொருட்களை உறுதிசெய்கிறது, ...