தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் அனைத்துத் தரப்பு மக்களின் வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்யும் முன்னோடி நிறுவனமாக திகழ்கிறது. மெட்ராஸ் நகரத்தின் வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்ய “நகர மேம்பாட்டுப் பொறுப்பாட்சிக் குழுமம்” என்ற பெயரில் ஒரு சிறிய அமைப்பாக 1947 ல் உருவாக்கப்பட்டது. நகர்ப்புற வளர்ச்சியின் காரணமாக மாநிலம் முழுவதும் வீட்டுவசதி துறையில் அதிகரித்து வரும் தேவைகளை சமாளிக்க 1961 ஆம் ஆண்டில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் என்ற ஒரு முழு அமைப்பாக உருவாக்கப்பட்டது.
வீட்டுவசதி என்பது, மக்களின் இன்றியமையாத தேவையாகும், மனிதன் பாதுக்காப்பாக வாழ்ந்திடவும், சமுதாயத்தின் அங்கமாக நிலை பெறவும் வீட்டுவசதி என்பது மிகவும் அவசியம் ஆகிறது. மேலும் வீட்டு வசதிக்கான முதலீடு, மற்ற தொழில் முதலீடுகளைக் காட்டிலும் பன்மடங்கு வருவாயும் ntiy வாய்ப்பும் உருவாக்குதல், நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணியாகவும் விளங்குகிறது.
வீட்டுவசதி தேவைகளை பூர்த்தி செய்வதில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் “அனைவருக்கும் வீடு” என்ற சிறந்த நோக்கத்துடன் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் கொள்கையின் ஒரு அங்கமாக கட்டுமானத்தில்தரமான பொருட்களை உறுதி செய்கிறது. கட்டுமானத்தில் சமீபத்திய நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பொதுமக்களின் தேவைகளின் அடிப்படையில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவு (EWS), குறைந்த வருவாய் பிரிவு (LIG) , மத்திய வருவாய் பிரிவு (MIG) மற்றும் உயர் வருவாய் பிரிவினருக்கு (HIG) வீடுகள் வழங்கிட சிறந்த நோக்கத்துடன் செயல்படுகின்றது.