நேரடி பணியாளர் தேர்வு அறிவிப்பு ரத்து செய்தல் - தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நேரடி பணிநியமனம் மூலம் நிரப்ப முன்பு முன்மொழியப்பட்டது. எனவே, அறிவிக்கை எண்.ப.தொ.நு.அ5/2643/2020. நாள்.19.02.2021 மூலம் அறிவிக்கை 21.02.2021 தேதியில் வெளியிடப்பட்டு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. தற்போது வாரியம் தனது தீர்மானம் எண்.7.01, நாள்.05.07.2022 மூலம் முன்னதாக வெளியிடப்பட்ட அறிவிக்கையை ரத்து செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வெளியிடப்பட்ட 19.02.2021 நாளிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.